Ungal Kelvigalukku Sri Ramakrishnarin Badhilgal (Tamil)
₹ 90.00
Out of stock
Tags:
மனிதர்களுக்குப் போதிப்பதற்காக ஒவ்வொரு யுகத்திலும் இறைவன் அவதரிக்கிறார். மோட்சப்பாதையில் தனக்கு ஏற்படும் சந்தேகங்களை மனிதன் இறைவனிடம் கேட்கிறான். இறைவன் அவனது சந்தேகங்களை நீக்கி ஞானத்தை வழங்குகிறார். தகுந்த குருவை அடைந்து அவரிடம் பணிவுடன் கேள்விகளைக் கேட்டு சந்தேகங்களைப் போக்கிக் கொள்ள வேண்டும் என்று உபநிஷதங்களும் பகவத் கீதையும் கூறுகின்றன. கட உபநிஷதத்தில் மாணவன் நசிகேதன் ஆசாரியர் யமனிடம் கேள்வி கேட்கிறான். பிருஹதாரண்யகத்தில் ஜனகர், கார்க்கி முதலியோர் யாக்ஞவல்கியரிடம் கேள்வி கேட்கின்றனர். இப்படியே பல உபநிஷதங்களும் கேள்வி பதில் வடிவாகவே அமைந்துள்ளன. உபநிஷதங்களின் சாரமான ஸ்ரீமத் பகவத் கீதையும் அர்ஜுனனுக்கும் பகவான் ஸ்ரீகிருஷ்ணருக்கும் நடந்த உரையாடலே. ஆசாரியர்கள் தங்களது சீடர்கள் மூலமாக மோட்சம் அடையும் வழியை மக்கள் அனைவருக்கும் உபதேசிக்கின்றனர். யுகாவதார புருஷர் பகவான் ஸ்ரீராமகிருஷ்ணர் தமது சீடர்களுக்கு எழும் சந்தேகங்களை நீக்கி அவர்களுக்கு அமுதமொழிகளை அருளியுள்ளார். 'ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்' என்ற தலைப்பில் இவை மூன்று பகுதிகளாக எமது மடத்திலிருந்து வெளியிடப்பட்டுள்ளன. அதில், ஸ்ரீராமகிருஷ்ணரிடம் பல கேள்விகளைப் பல பக்தர்கள் பல்வேறு சூழ்நிலைகளில் கேட்டுள்ளனர். அவற்றைத் தொகுத்து இந்த நூலில் கொடுத்திருக்கிறோம். கேள்விகளுக்கு அருகில் கொடுக்கப்பட்டுள்ள எண்கள் அமுதமொழிகளின் பக்க எண்களைக் குறிக்கின்றன. பக்தர்கள் அனைவரும் இந்த நூலைப் பெற்றுப் பயனடைவார்களாக!