Vivekanandarin Veeramozhigal Volumes 1 - 11 (Tamil)
₹ 1,260.00
Tags:
Product Details
சுவாமி விவேகானந்தரின் வீரமொழிகள்
(11–பகுதிகள்)
இறைவனின் திருக்கரங்களில் தெய்வீகக் கருவியாக இருந்து மக்களின் தெய்வீக இயல்பை அவர்கள் மீண்டும் உணரச் செய்கின்ற பணியைச் செம்மையாகச் செயல்படுத்தியவர் சுவாமி விவேகானந்தர். இந்தியாவிலும் மேற்கத்திய நாடுகளிலும் அறியாமையில் ஆழ்ந்திருந்த மனிதர்களைத் தனது ஆன்மீக சக்திமிக்க சொற்பொழிவுகள் மூலம் தட்டியெழுப்பினார்.
‘உருவமற்ற குரலாக இருந்தபடி அனைவருக்கும் விழிப்பூட்டுவேன்’ என்று முழங்கியவர் அவர். அத்தகைய தெய்வீகத் துறவியான சுவாமி விவேகானந்தரின் சொற்பொழிவுகளும் எழுத்துக்களும் அடங்கிய 11–பகுதிகள் கொண்ட தொகுப்பு நூல்களே இவை.
பகுதி – 1
இந்தப் பகுதியில்…
1. வீரமொழிகளுக்கு முன்னுரை போன்று அமைந்துள்ள ‘எனது வாழ்வும் பணியும்’ என்ற சொற்பொழிவு.
2. சுவாமி விவேகானந்தரை உலக அரங்கில் அடையாளம் காட்டிய ‘சிகாகோ சொற்பொழிவுகள்’.
3. இந்து மத வரலாற்றினைச் சுருக்கமாக எடுத்துக்கூறும் ஒரு கடிதம். இது சுவாமிஜி தமிழ் மக்களுக்கு எழுதிய கடிதமாகும்.
4. கர்மயோக சொற்பொழிவுகள்.
5. பக்தியோக சொற்பொழிவுகள்.
6. நாரத பக்தி சூத்திரங்களின் திரண்ட பொருள்.
பகுதி – 2
இந்தப் பகுதியில்…
1. பதஞ்ஜலியின் யோகநெறியை அடிப்படையாகக் கொண்ட ராஜயோக சொற்பொழிவுகள்.
2. பதஞ்ஜலி யோக சூத்திரங்களின் விளக்கவுரை.
3. அமெரிக்காவில் ஆயிரம் தீவுப்பூங்கா என்னும் தலத்தில் சீடர்களுக்கு ஆற்றிய அருளுரைகள்.
பகுதி – 3
இந்தப் பகுதியில்…
1. நியூயார்க்கிலும் லண்டனிலும் சுவாமிஜி ஆற்றிய ஞானயோக சொற்பொழிவுகள்.
2. வகுப்புச் சொற்பொழிவுகள்.
பகுதி – 4
இந்தப் பகுதியில்…
1. வேதாந்தம்.
2. வேதாந்தத்தின் உயிரூட்டும் தத்துவங்களையும், அவற்றைச் செயல்முறைப் படுத்தும் முறைகளையும் கூறும் ‘செயல்முறை வேதாந்தம்’.
3. மதத்தின் ஆரம்பம், அதன் பரிணாம வளர்ச்சி.
4. மதம் என்பதன் அடிப்படைக் கருத்துக்களைக் கூறும் ‘மதத் தத்துவமும் மன இயலும்.’
பகுதி – 5
இந்தப் பகுதியில்…
அமெரிக்காவிலும் இங்கிலாந்திலும் இந்திய ஆன்மீகத்தின் வெற்றிக்கொடியை நிலைநாட்டிவிட்டு சுவாமிஜி இந்தியா திரும்பியபோது இலங்கையிலும், பின்னர் தமிழ்நாடு, வங்காளம், உத்திரப் பிரதேசம், பாகிஸ்தானிலுள்ள பஞ்சாப், ராஜஸ்தான், பங்களாதேஷ் முதலிய இடங்களிலும் ஆற்றிய சொற்பொழிவுகள். இவையே ‘கொழும்பு முதல் அல்மோரா வரை...’ என்ற தலைப்பில் உள்ள 30 சொற்பொழிவுகளாகும்.
பகுதி – 6
இந்தப் பகுதியில்…
1. நான்கு சீடர்களுடன் சுவாஜியின் கருத்தாழமும் வீரமும் மிக்க உரையாடல்கள்.
2. பேட்டிகள், பொன்மொழிகள்.
பகுதி – 7
இந்தப் பகுதியில்…
1. உலக மதங்களைப் பற்றி சுவாமிஜி ஆற்றிய சொற்பொழிவுகள், குறிப்புகள், கட்டுரை, பத்திரிகைக் குறிப்புகள் ஆகியவை.
2. இந்து மதம் மற்றும் பகவத்கீதை பற்றிய சுவாமிஜியின் சொற்பொழிவுகள்.
3. புத்த மதம், அதன் அடிப்படைக் கருத்துக்கள், அதன் வளர்ச்சி, அதன் சீர்குலைவிற்கான காரணங்கள்.
4. கிறிஸ்தவ மதம், ஏசுநாதரின் வாழ்க்கை.
5. முகமதிய மதம்.
6. உலகின் அனைத்து மதங்களையும் ஒப்புநோக்கும் சுவாமிஜியின் ‘மத ஒப்புமை’ பற்றிய கருத்துக்கள்.
7. பகவான் ஸ்ரீராமகிருஷ்ணரின் வாழ்க்கையும் அவரது செய்தியும்.
பகுதி – 8
இந்தப் பகுதியில்…
1. இந்தியா, அதன் பாரம்பரியம், அதன் வரலாறு வளர்ந்த முறை, இந்திய இனம் செய்த தவறு, இனி என்ன செய்தால் இழந்த அதன் பெருமையை மீட்கக்கூடும் என இந்தியாவைப்பற்றி சுவாமி விவேகானந்தரின் கருத்துக்கள்.
2. இந்தியப் பெண்கள், இந்திய மற்றும் மேலைநாட்டுப் பெண்மை லட்சியங்கள்.
3. பிற நாடுகளுடன் ஒப்புமை.
4. ஐரோப்பிய பயணம் பற்றிய கட்டுரை.
பகுதி – 9
இந்தப் பகுதியில்…
1. ஆங்கிலம், வங்காளம், சம்ஸ்கிருதம், இந்தி என்று நான்கு மொழிகளில் சுவாமிஜி எழுதிய கவிதைகளின் மொழியாக்கம்.
2. 1888 முதல் 1894 –ஆம் ஆண்டு வரை சுவாமிஜி எழுதிய 200 கடிதங்கள்.
பகுதி – 10
இந்தப் பகுதியில்…
1. பல்வேறு காலங்களில், பல்வேறு இடங்களில் சுவாமிஜி எழுதிய, குறித்து வைத்த துணுக்குகள்.
2. 1895 முதல் 1896 –ஆம் ஆண்டு வரை சுவாமிஜி எழுதிய 228 கடிதங்கள்.
பகுதி – 11
இந்தப் பகுதியில்…
1. 1897 முதல் 1902 – ஆம் ஆண்டு வரை சுவாமிஜி எழுதிய 350 கடிதங்கள். அவற்றில் சுவாமி விவேகானந்தரின் வாழ்வில் தமிழகத்தின் பங்கு பற்றி அவர் எழுதிய கடிதங்களும் அடக்கம்.
2. பத்திரிகைக் குறிப்புகள்.